டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 2-வது தளத்தில் புற நோயாளிகள் பிரிவு பழை கட்டடம் உள்ளது. இங்கு உள்ள எண்டோஸ்கோப்பி அறையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து நோயாளிகள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில் 8 தீயணைப்பு வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







