வெங்கட் பிரபு தயாரிக்கும் “நண்பன் ஒருவன் வந்த பிறகு” படத்தின் முதல்பார்வை போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு, தற்போது விஜய் 68 படத்துக்கான கதை தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ‘லியோ’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு இப்படத்துக்கான பணிகள் தொடங்க உள்ளனர். இயக்குநர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பாக பிற படங்களை தயாரித்தும்வருகிறார்.
அந்த வகையில் ஆர்கே நகர், கசடதபற உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். இவர் தற்போது நண்பன் ஒருவன் வந்தபிறகு என்ற படத்தை வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் நடித்து, இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கலக்கப்போவது யாரு பாலா, ஆர்.ஜே.விஜய், குமரவேல், பவானி ஸ்ரீ, இர்பான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
Wish this poster gets recreated in future my friend @vp_offl, my best wishes! Nothing is impossible here!Work hard! Let #NOVP be a rocking blockbuster!
Produced by @Aishwarya12dec @masala_popcorn
A life by @ActorAnanth @BhavaniSre #NOVPFirstLook #NanbanOruvanVanthaPiragu pic.twitter.com/WvNLXSuzUY— Silambarasan TR (@SilambarasanTR_) August 6, 2023
ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ள இப்படத்தை ஒயிட் ப்லிம் ஸ்டுடியோஸ், மசாலா பாப்கார்ன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில், நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் முதல் பார்வை போஸ்டரை, நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் 13 முக்கிய கதாபத்திரங்கள் நண்பர்களாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







