முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதித்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015 நவம்பர் மாதம் வேளச்சேரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசினார். அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக  ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். விசாரணையில், முதலமைச்சர் செய்ய வேண்டிய மக்கள் பணி குறித்தே பேசியதாகவும், ஜனநாயக ரீதியாக முதல்வரை விமர்சிக்க உரிமை உள்ளதாகவும், தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கவில்லை எனவும் வாதிடப்பட்டது. 

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் தலைமையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்த நீதிபதி, இதுதொடர்பான விசாரணைக்கும் தடை விதித்தார். மேலும்,  ஜூன் மாதம் 15க்குள்  தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.  

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 24 பேர் உயிரிழப்பு!

EZHILARASAN D

மதுரைவாசிகளின் பாதிபேர் வீட்டு மொய் நோட்டில் இடம்பெற்றிருக்கும் கிரம்மர் சுரேஷ்.!

Halley Karthik

புதிய கல்விக் கொள்கை குறித்த கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? அமைச்சர் விளக்கம்!

Halley Karthik