IPL 2021: MI VS PBKS – இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற போகும் அணி எது?

இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் பலப்பரிட்சையில் ஈடுபட உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் பலப்பரிட்சையில் ஈடுபட உள்ளன. இரு…

இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் பலப்பரிட்சையில் ஈடுபட உள்ளன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் பலப்பரிட்சையில் ஈடுபட உள்ளன. இரு அணிகளும் இதுவரை தலா 4 போட்டிகளில் பங்கேற்று மும்பை 2 வெற்றிகளையும், பஞ்சாப் ஒரு வெற்றியையும் பதிவு செய்துள்ளன. இதனால் இன்றைய போட்டிகளில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும். பஞ்சாப் அணி தனது முதல் அணியை வெற்றியுடன் தொடங்கினாலும், அடுத்த 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.

மும்பை அணி முதலாவது போட்டியில் தோல்வியடைந்தாலும் அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும் கடந்த 20ம் தேதி டெல்லி அணியுடன் நடைபெற்ற போட்டியில் தோல்வி கண்டது. இதுவரை இரு அணிகளும் 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் 14 போட்டியில் மும்பை அணியும் 12 போட்டியில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.