முக்கியச் செய்திகள் தமிழகம்

பன்னீர் ரோஜா விலை சரிவு?

கொடைரோடு பூ சந்தையில் பன்னீர் ரோஜாக்களின் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு கொடைரோடு சந்தைக்கு அதிகாலை 5 மணி முதலே சுமார் 500 கிலோ பன்னீர் ரோஜா பூக்கள் முதல் செய்யப்பட்டு வருவது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால் தற்போது விழா காலங்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் குறைந்துள்ளதால் பன்னீர் ரோஜா விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. ஐம்பது ரூபாயைக் கடந்து பூக்கள் விற்பனையானால் மட்டுமே விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் தற்போது ஒரு கிலோ பன்னீர் ரோஜா பூ 20 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை ஆவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கொடைரோடு சந்தையில் இருந்து மதுரை மற்றும் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு பன்னீர் ரோஜா கொள்முதல் செய்து அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். பன்னீர் ரோஜாக்களின் வரத்து அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை சரிவை சந்தித்தாலும் விழாக்கள் மற்றும் சில்லறை வணிகர்கள் குறைந்துள்ளதால் விலை குறைவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். எடுப்பு கூலிக்கு கூட இந்த விலை அப்படி ஆகவில்லை என விவசாயிகள் கவலையோடு தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆண்டிப்பட்டியில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி

Arivazhagan CM

கல்லக்குடி பேரூராட்சி ஊறுப்பினர்கள் பதவியேற்பு.

Halley Karthik

ரசிகரின் சாலையோர கடைக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த சோனு சூட்!

Jayapriya