27 C
Chennai
May 19, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள்

ராமநாதபுரத்தில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் கல்லூரியை மதுரைக்கு மாற்ற முடிவு!

ராமநாதபுரத்தில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் கல்லூரியை மாற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பயின்று வரும் மதுரை எய்ம்ஸ்
மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 150 பேருக்கு போதிய இட வசதியும், மருத்துவ
பயிற்சியும் கிடைக்காத சூழல் உள்ளது.  இந்த காரணத்தால்,  மருத்துவக்கல்லூரி மாணவர்களில் 100 பேரை மதுரையில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருமங்கலம் அரசு மருத்துவமனையில்,  அந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் மருத்துவமனையில் இருந்து 10 கிமீ சுற்றளவுக்குள் 100 மாணவர்களுக்கான வகுப்புகள், ஆய்வகம், விடுதி உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய கட்டிடத்தை வாடகைக்கு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது.  ஜனவரி 18-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்: ஆப்கானிஸ்தானுடனான முதல் டி20 போட்டி – இந்தியா அபார வெற்றி.!

இப்போதைக்கு ஓராண்டு காலத்திற்கு வாடகைக்கு கேட்பதாகவும், தேவைப்பட்டால்
2 ஆண்டுகளுக்கு அதை நீட்டிப்பு செய்வதாகவும் தெரிவித்துள்ளது.  எய்ம்ஸ்
மருத்துவ கட்டுமானம் விரைவில் துவங்கும் என எதிர்பார்த்திருந்த சூழலில் இந்த
அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading