எலெக்ட்ரிக் டெட்டனேட்டா் கருவிகளுக்கு தடை? மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்கருவிகளுக்கு வரும் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வாத்தக (டிபிஐஐடி) ஊக்குவிப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:…

எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்கருவிகளுக்கு வரும் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வாத்தக (டிபிஐஐடி) ஊக்குவிப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

எலெக்ட்ரிக் டெட்டனேட்டர் ஆபத்தான தன்மை கொண்டது என்று மத்திய அரசு கருதுகிறது. பொதுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மின்சார டெட்டனேட்டரைத் தயாரிப்பது, வைத்திருப்பது மற்றும் இறக்குமதி செய்வது ஆகியவற்றைத் தடைசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெடிபொருள் துறையினருடன் கலந்தாலோசித்த பிறகு, பொது நலன் கருதி, 2024-2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதன் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்படும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது.”

எலெக்ட்ரிக் டெட்டனேட்டரின் உற்பத்தி, வைத்திருப்பது மற்றும் இறக்குமதியை மத்திய அரசு இதன் மூலம் தடை செய்கிறது. இது நாடு முழுவதும் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.