கடன் தொல்லை; பழனியில் உயிரிழந்த கேரள தம்பதி

பழனியில் கடன் தொல்லை காரணமாகக் கேரளாவைச் சார்ந்த தம்பதிகள் இருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு நேற்று காலை கேரளாவைச் சார்ந்த சுகுமாரன்- சத்யபாமா‌…

பழனியில் கடன் தொல்லை காரணமாகக் கேரளாவைச் சார்ந்த தம்பதிகள் இருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு நேற்று காலை கேரளாவைச் சார்ந்த சுகுமாரன்- சத்யபாமா‌ எனும் தம்பதி வந்துள்ளனர். அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை பதிவு செய்து தங்கியுள்ளனர். பின்னர் பழனி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வந்ததாகக் கூறி அங்குத் தங்கிய நிலையில், நேற்று நள்ளிரவு தனியார் விடுதிக்குக் கேரளாவைச் சேர்ந்த சிலர் அழுதபடியே வந்துள்ளனர்.

இதுகுறித்து விடுதி ஊழியர்கள் கேட்டபோது, இந்த விடுதியில் தங்கியுள்ள கணவன் – மனைவியான சுகுமாரன் – சத்யபாமா இருவரும் தங்களது உறவினர்கள்‌ என்றும், அவர்கள் இருவரும் இந்த விடுதியின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து தங்களுக்கு அனுப்பி தாங்கள் இருவரும் உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாக வாட்சப் மூலம் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அண்மைச் செய்தி: ‘Chrome Password Manager-ல் எப்படி புதிய Password-ஐ இணைப்பது?’

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த‌ விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தம்பதி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்துள்ளனர்.

மேலும், தங்களது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை எனவும், தாங்கள் வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாததால் உயிரை மாய்திதுக் கொள்வதாக மலையாளத்தில் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துத் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன்‌ பிரச்சினையால் கேரள தம்பதி இருவரும் பழனியில் உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.