Chrome Password Manager-ல் எப்படி Password இணைப்பது?

Chrome Password Manager-ல் எப்படி Password-ஐ தாமாக இணைப்பது என்பது குறித்து விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு. Google Chrome அதன் Password கட்டமைப்பைப் புதுப்பித்துள்ளது. இதற்குமுன் Desktop Version-ல், சேவைகள், பயன்பாடுகள் மற்றும்…

Chrome Password Manager-ல் எப்படி Password-ஐ தாமாக இணைப்பது என்பது குறித்து விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு.

Google Chrome அதன் Password கட்டமைப்பைப் புதுப்பித்துள்ளது. இதற்குமுன் Desktop Version-ல், சேவைகள், பயன்பாடுகள் மற்றும் இணையதளங்களுக்கான புதிய Password கட்டமைப்பை நாமாக வைத்துக்கொள்ளும் சேவை இருந்தது. இப்போது, ​​நிறுவனம் Chrome – ன் Android பதிப்பிலும் இந்த அம்சத்தை வெளியிட்டுள்ளது. பயனர்கள் இப்போது Chrome – ன் Password Manager-ல் Password-ஐ மாற்றுவதற்கான எளிமையான வழிகளை நாங்கள் காட்டுகிறோம்.

Android-ல் புதிய Password-ஐ உருவாக்கும் வழிமுறை:

1. Google Chrome-ன் சமீபத்திய Update-ஐ புதுப்பித்து, அதைத் திறக்க வேண்டும்.
2. இப்போது, ​​மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிக்குச் சென்று, அமைப்புகளுக்குச் செல்ல வேண்டும்.
3. கீழே சென்று கடவுச்சொல் விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
4. இங்கே, Add button-ஐ தேர்வு செய்து, இணையதள URL, பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் போன்ற விவரங்களை உள்ளிட்டு சேமிக்க வேண்டும்.

அண்மைச் செய்தி: ‘’பா.ஜ.க.வின் போக்கைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ – எம்.பி. தொல். திருமாவளவன்’

Desktop-ல் புதிய Password-ஐ உருவாக்கும் வழிமுறை:

1. Google Chrome-ன் அமைப்புகளுக்குச் செல்ல வேண்டும்.
2.Password-ஐ தேடி அதைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. இங்கே, Add Password-ஐ காண்பீர்கள், அதைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. உள்நுழைவு தகவலை உள்ளிடுமாறு கேட்கும் புதிய பாப்அப் தோன்றும்.
5. விவரங்களை உள்ளிட்டுச் சேமி பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு நமக்கு விருப்பமானவற்றைப் பாதுகாக்க விரும்பிய Password-ஐ உருவாக்கிக்கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.