இறந்து போன தந்தையின் உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன் – நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

இறந்துபோன தனது தந்தையின் உடல் முன்பு மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கண்ணீருடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள் அவர்களின் கணவர்…

இறந்துபோன தனது தந்தையின் உடல் முன்பு மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கண்ணீருடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள் அவர்களின் கணவர் ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

இந்த நிலையில் இவர்களது மகன் பிரவீன் என்பவருக்கு வரும் 27ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் தனது தந்தை உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்விற்கு மகன் பிரவீன் திருமணம் செய்யவிருக்கும் சென்னையைச் சேர்ந்த சொர்ணமால்யா இறப்பு நிகழ்ச்சிக்கு வந்தபோது தனது தந்தையின் ஆசிர்வாதத்துடன் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதன் அடிப்படையில் உடனடியாக இரண்டு நபர்களும் திருமண கோலத்தில் தோன்றி உயிரிழந்த தனது தந்தை ராஜேந்திரன் முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு கிராம மக்களிடையே பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைச் செய்தி: ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டம்! பாராட்டு தெரிவித்த குடும்பத் தலைவிகள்!!

மேலும், தந்தை உயிரிழந்த நிலையில் தன்னுடைய தந்தையின் உடலின் முன்பு தனது தாயை வைத்துக் கொண்டு திருமணம் செய்துகொண்ட மகனின் செயல் குறித்து கிராம மக்களிடையே பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.