முக்கியச் செய்திகள் தமிழகம்

தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

தனியார் குடியிருப்பில் தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் பெண் சடலம் மீட்பு.

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் மூர்த்தி, இவரது மனைவி தேவி . மூர்த்தி கடந்த வருடம் உடல் நலக்குறைவால்  இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவருடைய மனைவி தேவி மற்றும்  இவரது சகோதரி சத்யா இருவரும் நேற்று கோவை உப்பிலி பாளையம் அருகே உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்ததாகத் தெரிகிறது. அப்போது நேற்று மாலை 5.30 மணியளவில் பணியிலிருந்த தேவி மாயமானார்.இதையடுத்து சத்யா அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில், 7.30
மணியளவில் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் பார்த்த போது தேவி உள்ளே சடலமாக
இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதிவாசிகள் தீயணைப்புத் துறை மற்றும்
சிங்காநல்லூர் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ
இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தேவியின் உடலை மீட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தீயணைப்புத் துறையினர் தடையங்களைச் சேகரித்து  போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் தேவியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு, செய்து கொலை செய்யப்பட்டாரா அல்லது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடிகை மீரா மிதுனை விரைந்து கைது செய்வோம்-நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

EZHILARASAN D

நடராஜனுக்கு ஒரு விதி? விராட் கோலிக்கு ஒரு விதியா?- சுனில் கவாஸ்கர் சாடல்!

Jayapriya

“கொசுவையே ஒழிக்க முடியாதவர்கள் ஊழலை எப்படி ஒழிப்பார்கள்”

Gayathri Venkatesan