விவாகரத்து கோரி தனுஷ்-ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழில் முண்ணனி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.  தமிழில் …

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழில் முண்ணனி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.  தமிழில்  மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் பட்டையை கிளப்பி வருபவர்.   முன்னணி நடிகரான தனுஷ்,  நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதிக்கு,  யாத்ரா,  லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர்.  இவ்விவகாரம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கருத்து வேறுபாட்டால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  இந்நிலையில் பரஸ்பரம் விவாகரத்துக் கோரி இருவர் தரப்பிலும் சென்னை குடும்ப நல நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.