சிரிப்பு மருந்தை பரிசாக அளித்த டிடி ரிட்டர்ன்ஸ் -விமர்சனம்!

சந்தானம் நடிப்பில் வெளியானது தில்லுக்கு துட்டு படத்தின் 3ம் பாகம். இந்த தில்லுக்கு துட்டுவின் 3ம் பாகம் தான் டிடி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. தில்லுக்கு துட்டு 1ம் பாகம் மிகப்பெரிய…

சந்தானம் நடிப்பில் வெளியானது தில்லுக்கு துட்டு படத்தின் 3ம் பாகம். இந்த தில்லுக்கு துட்டுவின் 3ம் பாகம் தான் டிடி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. தில்லுக்கு துட்டு 1ம் பாகம் மிகப்பெரிய கலெக்சனை அள்ளியது. 2ம் பாகம் கொஞ்சம் கம்மி தான் இருந்தாலும் பரவாலாத கலெக்சன். இப்போ 3ம் பாகம் இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் தான், ஏன்னா ஹூரோவாக அவர் நடித்த படங்களில் சந்தானத்திற்கு கைகொடுத்த படம் என்றால் அது தில்லுக்கு துட்டு படம் தான். அப்படி இருக்கையில் இந்த 3ம் பாகத்தில் காமெடி வொர்க் அவுட் ஆச்சா இல்லையா பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதை

தனது காதலியான சுரபியை காப்பாற்றுவதற்காகத் திருடிய பணம் பேய் பங்களாவில் மாட்டிக் கொள்கிறது. இந்த பணத்தை பேய் பங்களாவிலிருந்து மீட்டார்களா இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை.

ட்ரெய்லர் பார்க்கும் போது ஆமா இந்த மாதிரி தான கத இருக்க போகிறதென்று சலிப்பு தட்டியது. ஆனா வெறும் ட்ரெய்லர வெச்சு படத்த எடை போடக் கூடாது, ஏன்னா படத்தில் உள்ள காமெடி படத்த எங்கேயோ கூட்டிட்டு போகுது.

ஒரு பேய் படம் அதுவும் சந்தானம் படம் அதுவும் தில்லுக்கு துட்டு படத்துடைய 3ம் பாகம் அப்படின்றப்ப வழக்கம் போல் உள்ள காமெடிகள் தான் இருக்குன்னு எதிர்பார்த்து போகியிருப்போம். ஆனால் படத்தில் நம் எதிர்பார்த்த கான்செப்ட் இல்ல. ஆமாங்க இந்த படத்தில் பேய்க்கு மனிசனுக்கு கேம் ஷோ நடக்கிறது. இந்த கேம் ஷோவ ரொம்ப அற்புதமா காமெடி கலந்த காட்சிகள வைத்து எடுத்திருக்கிறார்கள். படத்தில் லாஜிக் மட்டும் எதிர்பார்க்க முடியாது.

நடிகர்கள், மேக்கிங், இசை

இந்த படம் சந்தானம் நடித்த படமென்று சொல்ல முடியாது ஏன்னா அவ்வளவு நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். பொதுவா படங்களில் ஹூரோவ தான் படம் முழுக்க காமிப்பாங்க. ஆனால் இந்த படத்தில் சந்தானம் தனது நண்பர்கள் எல்லாத்தையும் நடிக்க வெச்சு அங்க எல்லாத்துக்கு Equal Space கொடுத்திருக்காரு. இதற்கே முத்தல்ல சந்தானத்தை பாராட்டவேண்டும். மற்ற நடிகர்களுக்கு முன் உதார்னமா இருக்கிறார். பழைய சந்தானத்தையும் இந்த படம் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

இத தாண்டி படத்தில் மொட்டை ராஜேந்திரன் வரும் சீன் தியேட்டர்ல செம்மையா Score பண்ணுது. அதைக்கடுத்தபடி பார்த்தீங்கன்னா கிங்ஸ்லீ இவர் வர சீன்னும் அல்டிமேட். மேலும், பிரதீப் ராவத், பெப்ஸி விஜயன், சாய் தீனா, முனீஸ்காந்த், மாறன், தங்கதுரை, தீபா உள்ளிட்டவர்களின் காமெடி கலந்த செயல்கள் படத்தின் Highlights.

மேங்க்கிங் பொருத்தவரை அடுத்தடுத்து தேவையான சீன்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது. பேய்யை காமிக்கிறது, Lightings, கேமரா ஆங்கிள் இது எல்லாமே நச்சுன்னு இருந்துச்சு படத்தில். படத்துடைய Duration வெறும் 2 மணி நேரம் தான். இதில் முதல் பாதி சீன் பேய் பங்களாக்கு சந்தானம் அண்ட் டீம் வருவத காமிச்சிருப்பாங்க. ஆனா முதல் பாதி படம் செம்ம ஜாலியா போகுது. இராண்டாம் பாதி பற்றி சொல்லனுன்னா நீங்க சரிக்கிறதுல்ல உங்க வயிறு புண்ணா போய்விடும் அந்த அளவுக்கு காமெடி இருந்தது படத்துல. 2 மணி நேரத்துல சொல்ல வேண்டிய விசயத்த சொல்லி முடிச்சிருக்கிறார்கள்.

இசையை பொருத்தவரை டாம் அண்ட் ஜெர்ரி, பழைய ரெட்ரோ மியூசிக் இது எல்லாத்தையும் கலந்து அடிச்ச மாதிரி அமர்க்களப்படுத்திவிட்டார் இசையமைப்பாளர்.

இந்த மாதிரியான கதைய சந்தானம் Choose பண்ணி நடிச்சாருன்னா கண்டிப்பா அவருடைய Carrierக்கு பெஸ்ட்டா இருக்கும். ச்ச என்னடா லைப் இது எத தொட்டாலும் பிரச்னை இந்த மாதிரி பொலம்பிட்டு இருந்தீங்க அப்படியென்றால் இந்த டிடி ரிட்டர்ன்ஸ் படத்த போய் தியேட்டர்ல பாருங்க உங்க மைன்ட் செட் மாறும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.