கேரளாவில் உயிரிழப்பு செய்த திருநங்கையின் காதலரும் உயிரிழப்பு

கேரள சமூக செயற்பாட்டாளரான திருநங்கை உயிரிழந்த 2 நாட்களில் அவருடன் வாழ்ந்து வந்த ஆண் நண்பரும் உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அனன்யாகுமாரி அலெக்ஸ்…

கேரள சமூக செயற்பாட்டாளரான திருநங்கை உயிரிழந்த 2 நாட்களில் அவருடன் வாழ்ந்து வந்த ஆண் நண்பரும் உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அனன்யாகுமாரி அலெக்ஸ் (28) திருநங்கை யான இவர், சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வந்தார். முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கியான இவர், எல்.ஜி.பி.டி.கியூ (LGBTQ) அமைப்பினரின் உரிமைக்காகப் போராடியவர். சபரிமலையில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற ஆதரவு குரலை எழுப்பியவர்.

இவர் பாலின மாற்று அறுவை செய்துகொண்ட பிறகு மனம் மற்றும் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்த அறுவை சிகிச்சை மூலம் அவர் விரும்பிய பலன் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அனன்யாகுமாரி, கொச்சி யில் தான் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

அனன்யாவின் நண்பர்கள், அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை மீது குற்றம் சாட்டினர். சரியான முறையில் அறுவை சிகிச்சை செய்யாததால் அவர் வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதனாலேயே அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருநங்கைகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அனன்யாகுமாரிஉயிரிழப்பு குறித்து விசாரிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. காவல்துறையும் மருத்துவக் குழு ஒன்றும் விசாரணையில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் அனன்யாகுமாரி, திருவனந்தபுரம் ஜகதி பகுதியை சேர்ந்த ஜிஜூ கிரிஜா ராஜ் (30) என்ற ஆண் நண்பருடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். அனன்யா மறைந்த இரண்டு நாட்களிலேயே அவரும் உயிரை மாய்த்துக் செய்துள்ளார். தனது நண்பர் வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில், அவர் உடல் மீட்கப்பட்டது.

ஹேர் ஸ்டைலிஷ்டான ஜிஜூ, அனன்யாஉயிரை மாய்த்துக்  கொண்டதில் இருந்து மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் அவரும் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் அவர் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அனன்யாவும் அவரும் இந்த வருடத் தொடக்கத் தில் ஒன்றாக வாழத் தொடங்கினர் என்றும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்ததாகவும் அவர் நண்பர்கள் கூறியுள்ளனர்.

இந்த உயிரிழப்பு அந்தப் பகுதியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.