முக்கியச் செய்திகள் இந்தியா

ஜூலை 27ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

ஜூலை 27ல் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்தியா வருகிறார். இந்த வருகையின்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்தறை அமைச்சராக பொறுப்பேற்ற ஆண்டனி பிளிங்கன் முதன் முறையாக இந்தியா வருகிறார். ஜூலை 27ம் தேதி இந்தியா வரும் பிளிங்கன் ஜூலை 28 வரை இந்தியாவில் முக்கிய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார். முதற்கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார்.

முன்னதாக ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த இந்த பயணத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மட்டுமே இந்தியா வந்திருந்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பிளிங்கனின் வருகை ரத்தானது. இதனையடுத்து தற்போது ஜூலை 27ல் பிளிங்கன் இந்தியா வருகிறார். இந்த சந்திப்பில் இந்தியா – அமெரிக்காவின் நட்பு மேலும் வலுப்படும் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து வெளிவருவது, இந்தோ-பசிபிக் பிராந்தியம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐ.நாவுடனான ஒத்துழைப்பு என பல சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

லக்கிம்பூர் கேரி சம்பவம்; உள்ளூர் பாஜக தலைவர் உட்பட 4 பேர் கைது

Halley karthi

தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

Gayathri Venkatesan

ஜெயலலிதா பாணியில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Halley karthi