அயோத்தி ராமர் கோயிலில் அரவிந்த் கேஜரிவாலும், பகவந்த் மானும் குடும்பத்துடன் தரிசனம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் குடும்பத்துடன் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் குடும்பத்துடன் அயோத்தி ராமர்…

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் குடும்பத்துடன் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் குடும்பத்துடன் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தனர். அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் ஜன.22-ஆம் தேதி மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இக்கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தா்கள் சென்று வருகின்றனர். இந்த கோயிலின் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க அரவிந்த் கேஜரிவாலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணித்திருந்தார்.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று டெல்லி முதல்வர் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தங்களின் குடும்பத்துடன் இன்று தரிசனம் மேற்கொண்டனர். தரிசனம் குறித்து தனது X தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கேஜரிவால், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்ததாக பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.