புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2022-2023 ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல, மகரவிளக்கு காலம் இறுதிக் கட்டத்தை அடைந்து உள்ளது. நாளை காலை நடை அடைக்கப்படுகிறது. இன்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை கோவில் நடை மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ம் தேதி மாலை திறக்கப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 14ம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் முடிவடைந்த பின்னரும் பக்தர்களின் வருகை குறையாமல் உள்ளது. இதற்கிடையே 14ம் தேதிக்குப் பின்னர் கடந்த 4 தினங்களாக சராசரியாக 75 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசிக்கலாம் என்பதால் பக்தர்கள் சபரிமலையில் அதிக அளவில் குவிந்திருந்தனர். இந்த மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் நாளை காலை 7 மணிக்கு சபரிமலை கோயில் நடை அடைக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்த வருடத்துக்கான மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும். சபரிமலையில் நடப்பு சீசனில் நேற்று வரை 48 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்