’விக்கிபீடியா’ போன்ற இணையவழி தரவு தளங்களில் வெளியிடப்படும் ஆதாரங்களை முழுமையாக நம்பமுடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய கலால் வரி சட்டம் 1985-ன் முதல் ஷரத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட ஆல் இன் ஒன் காண்ட்ராக்ட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் சரியான வகைப்படுத்துதலை வெளியிடக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், விக்ரம் நாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனு மீதான விசாரணையின் போது, மனுவில் குறிப்பிட்டுள்ள வகைப்படுத்தலுக்கு விக்கிபீடியா தரவு தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தை அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இதனை கேட்ட அளித்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது: விக்கிபீடியா போன்ற இணைய வழி தரவு தளங்கள், உலகெங்கிலும் உள்ள அறிவுசார் தகவல்களுக்கான இடமாக இருந்தாலும், சட்ட வழக்கு விவகாரங்களில் ஆதாரங்களாக இந்த தரவுகளை பயன்படுத்த முடியாது. பயனாளர்கள் மற்றும் பெரும்பான்மையானவர்களால் தொகுக்கப்படும் தகவல்களை அடிப்படையாக கொண்ட இந்த ஆதாரங்களை முழுமையாக நம்ப முடியாது. இதனை அனுமதிப்பது தவறான தகவல்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். எனவே நம்பகமான ஆதாரங்களை சமர்பிக்குமாறு வழக்கறிஞர்களை நீதிமன்றங்களும் வற்புறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.







