எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீடு தொடர்பாக யாராவது சட்டத்தை கையில் எடுத்து பிரச்னையை உருவாக்கினால் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்..
திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
எதற்கும் துணிந்தவன் பட விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சாமிநாதன், படம் குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை எனவும், இது தொடர்பாக யாராவது சட்டத்தை கையில் எடுத்து பிரச்னையை உருவாக்கினால் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்தார்..








