புதிய கப்பல்கள் வாங்குவதற்கு ஆலோசனை

பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு புதிய கப்பல்கள் வாங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு தலைமையில் நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு பூம்புகார் கப்பல் போக்குவரத்து…

பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு புதிய கப்பல்கள் வாங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு தலைமையில் நடைபெற்றது.

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.

இதில், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான மூன்று கப்பல்களுக்கு திறன் குறைந்துவிட்ட காரணத்தால் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது.

மீண்டும் புதிய கப்பல்கள் தமிழக அரசு சார்பில் வாங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் தீரஜ்குமார் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.