கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்குகிறது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள முதல் 2 அணு உலைகள் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற்று வருவதால், இரண்டாவது அணு உலையில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், மூன்று மற்றும் நான்காம் அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மேலும் 2 அணு உலைகள் அமைக்கும் பணி இன்று தொடங்குகிறது.
இதற்கான நிகழ்ச்சியில், அணுமின் நிலைய வளாக இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர்கள் இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர்.
,