இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம் தோறும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலை நிலவரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.58.5 குறைந்து ரூ.1,822.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.








