ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா-பாகிஸ்தான் ‘ஏ’ அணிகள் இன்று மோதல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’-பாகிஸ் தான் ‘ஏ’ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன..

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் 4-வது நாளான இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணி, நடப்பு சாம்பியனும், பரம எதிரியுமான பாகிஸ்தான் ‘ஏ’ அணியை எதிர்கொள்கிறது. இந்திய ‘ஏ’ அணி தனது தொடக்க ஆட்டத்தில் 306 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை ஊதித்தள்ளியது. முதலில் ஆடி 332 ரன்கள் குவித்த இந்திய அணி, நேபாளத்தை 11.3 ஓவர் களில் 26 ரன்னில் சுருட்டியது. பாகிஸ்தான் ‘ஏ’ அணி தனது முதல் ஆட்டத்தில் 61 ரன் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீர கத்தை எளிதில் தோற்கடித்தது. முதலில் பேட் செய்து 245 ரன்னில் ஆல்-அவுட் ஆன பாகிஸ்தான் அணி, அடுத்து அடிய ஐக்கிய அமீரகத்தை 40.5 ஓவர்களில் 184 ரன்னில் அடக்கியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.