கிராமத்தை புரட்டிப்போட்ட சூறாவளி – 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!!

தென்காசி மாவட்டத்தில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன. வெப்ப சலனம் காரணமாக தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. ஆலங்குளம் அருகே வீராணத்தில்…

தென்காசி மாவட்டத்தில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன.

வெப்ப சலனம் காரணமாக தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. ஆலங்குளம் அருகே வீராணத்தில் நேற்று மழையுடன் கூடிய திடீர் சூறாவளி காற்றும் வீசியது. இதில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. வீட்டில் உள்ள மின் விசிறி, பாத்திரங்கள், கட்டில், மேஜை உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தது. சூறாவளி காற்றின் காரணமாக வீட்டின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தகர ஷீட்டுகள், சிமெண்ட் ஷீட்டுகள் காற்றில் பறந்தன.

சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சூறாவளி காற்று வீராணம் கிராமத்தை புரட்டி போட்டது. மேலும் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. இதில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏற்படவில்லை.

மின்கம்பங்கள் சாய்ந்ததால் இப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களில் முறிந்து விழுந்த மரங்கள், மின்கம்பங்களை அப்புறப்படுத்தும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.