வங்கக்கடலில் உருவாகும் புயல் – வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மத்திய வங்கக்கடலில் வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடக்கு அந்தமான்…

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மத்திய வங்கக்கடலில் வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடக்கு அந்தமான் கடல் மற்றும் சுற்றுப்புறங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அது சராசரி கடல் மட்டத்தில் 3.1 கிமீ வரை பரவியுள்ளது. அதன் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

 

இது வட மேற்கு நோக்கி நகர்ந்து மத்திய வங்காள விரிகுடாவில் 22ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. இது தொடர்ந்து மேற்கு மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், வரும் 23 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மத்திய வங்கக்கடலில் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.