அமெரிக்காவில் அண்டை வீட்டு பெண்மணியை கொன்று, அவரின் இதயத்தை சமைத்து தனது உறவினருக்கு விருந்து படைத்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் லாரன்ஸ் பவுல் ஆண்டர்சன் எனும் நபர் தனது அண்டை வீட்டு பெண்மணியை கொன்று, அவரின் இதயத்தை எடுத்து உருளைக்கிழங்குடன் சமைத்து தனது குடும்பத்தில் உள்ள அங்கிள், அவரின் மனைவி மற்றும் நான்கு வயது குழந்தைக்கும் கொடுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிள் மற்றும் அவரின் மனைவியை கொடடூரமாக தாக்கியுள்ளார். ஆண்டியின் கண்களை பயங்கரமாக தாக்கி சேதப்படுத்தியுள்ளார். ஆனால், உயிரிழப்பு ஏற்படவில்லை. மேலும் நான்கு வயது சிறுமியையும் அவர் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பின்னரே காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆண்டர்சனை காவல்துறை கைது செய்துள்ளது.
42 வயதான ஆண்டர்சன் ஏற்கெனவே ஆயுதம் மற்றும், போதைப்பொருள் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார். 20 ஆண்டுகள் சிறை தண்டனையில் 9 ஆண்டுகளை கழித்த நிலையில், கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்துள்ளார். தனது வாழ்நாளில் அவர் ஏறத்தாழ 15 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த ஆண்டர்சன் தனது அங்கிள் வீட்டில் வசித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். இதற்கான காரணங்கள் குறித்த விசாரணையில் காவல்துறையினரும், புலனாய்வு அமைப்புகளும் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட ஆண்டர்சன் தனக்கு பெயில் வேண்டாம் என நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.