அமெரிக்க அதிபராக ஜோ பைடனும் துணை அதிபராக கமலா ஹாரிசும் இன்று பதவி ஏற்க உள்ளனர்.
பல்வேறு சர்ச்சைகள், மோதல்களைத் தொடர்ந்து இன்று அமெரிக்க அதிபராக ஜோ பைடனும் துணை அதிபராக கமலா ஹாரிசும் பதவி ஏற்க உள்ளனர். இதனால் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி காலை 11 மணியளவில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ள நிலையில், தொடக்க உரைக்குப் பின்னர் பகல் 12 மணியளவில் அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் உறுதிமொழியுடன் பொறுப்புகளை ஏற்க உள்ளனர். சமீபத்தில் நடந்த வன்முறை காரணமாக அமெரிக்க நாடாளுமன்றம், அதிபர் அலுவலகம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் ஏழு அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 25 ஆயிரம் போலீசார் வாஷிங்டன் பகுதியில் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.







