பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட இரட்டையர்கள்!

உலகிலேயே முதன் முறையாக பாலின மாற்று அறுவை சிகிச்சையை பிரேசில் நாட்டை சேர்ந்த 19 வயதான இரட்டையர்கள் மேற்கொண்டனர். பிரேசிலில் 4000 பேர்களை மட்டுமே கொண்ட டப்பிரா பகுதியை சேர்ந்த 19 வயதான இரட்டையர்கள்…

உலகிலேயே முதன் முறையாக பாலின மாற்று அறுவை சிகிச்சையை பிரேசில் நாட்டை சேர்ந்த 19 வயதான இரட்டையர்கள் மேற்கொண்டனர்.

பிரேசிலில் 4000 பேர்களை மட்டுமே கொண்ட டப்பிரா பகுதியை சேர்ந்த 19 வயதான இரட்டையர்கள் மைலா மற்றும் சோபியா. பிறவியில் ஆணாக பிறந்த இவர்கள், ஒருபோதும் தங்களை ஆணாக உணரவில்லை என்று கூறப்படுகிறது.

பிறந்தது முதல் அனைத்தையும் ஒன்றாக செய்யும் பழக்கம்கொண்ட மைலாவும், சோபியாவும் தங்களை பெண்ணாக மாற்றி கொள்வதற்கு ஆர்வம் காட்டினர். தங்களை பெண்ணாக மற்றிக்கொள்ள பாலின மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து அறுவை சிகிச்சை 5 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. சிகிச்சை வெற்றியடைந்ததை அடுத்து மைலாவும், சொபியாயும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து இரட்டையகள் கூறுகையில், “எங்கள் உடலை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். ஆனால் எங்கள் பாலினத்தை விரும்பவில்லை. கடவுளின் அருளால் தற்போது பெண்ணாக மாறியுள்ளோம். எங்கள் பெற்றோர் ஒருபோதும் எங்களை எண்ணி கவலை அடைந்ததில்லை; இச்சமூகத்தை எண்ணியே அச்சம் கொண்டனர்” என்று கூறினர்.

மேலும் இதுகுறித்து பிரேசில் நாட்டின் திருநங்கைகள் மையத்தின் மருத்துவர் ஜோஸ் கார்லோஸ் மார்டின்ஸ், “உலகிலேயே இரட்டையர்களாக பிறந்த இரு ஆண்கள் பெண்ணாக மாற பாலின அறுவை சிகிச்சை மேற்கொண்டது இதுவே முதன்முறை. சுமார் 5 மணி நேரம் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.