‘கடலூர் மருத்துவக் கல்லூரியில், நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது’

கடலூர் மருத்துவக் கல்லூரியில், அரசு நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க கோரியும், தற்போதுள்ள கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும்…

கடலூர் மருத்துவக் கல்லூரியில், அரசு நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க கோரியும், தற்போதுள்ள கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் அதிமுக, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை மற்றும் இடதுசாரி கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தன.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேரும்போது எம்பிபிஎஸ் படிப்புக்கு 5,44,370 ரூபாய், பிடிஎஸ் படிப்புக்கு 3,45,000 ரூபாய் என்ற கட்டணத்துக்கு மாணவர்கள் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘பட்டாசு ஆலை வெடி விபத்துகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் 

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபின் எம்பிபிஎஸ் படிப்புக்கு 1,44,000 ரூபாய், பிடிஎஸ் படிப்புக்கு 95,000 ரூபாயாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதனால் அரசுக்கு 119 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மீண்டும் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை எனக்கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், படிக்கும் நேரத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சரியானது அல்ல என்றும் அறிவுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.