தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலாத்தளங்களை சர்வதேச தரத்திற்கு இணையாக மாற்றும் வகையில், சுற்றுலா பெருந்திட்டத்தை தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் தனித்துவத்தை நிலைப்படுத்துதல், சுற்றுலாத்தளங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுலாப் பயணிகள் தங்கும் காலத்தினை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டின் கலாச்சாரம், வரலாறு மற்றும் பாரம்பரிய உணவுமுறையை பயன்படுத்தி சுற்றுலாப்பயணிகளை அதிகளவு ஈர்க்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தையும் 300 சுற்றுலாத்தளங்களில் செயல்படுத்தும் விதமாக சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.







