ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வரும் 13 ஆம் தேதி தனி விமானத்தில் யுஏஇ செல்ல இருப்பதாகக் கூறப்படு கிறது.
14 வது ஐபிஎல் திருவிழா கொண்டாட்டமாக நடந்து வந்தநிலையில் அதற்கு கொரோனா முட்டுக் கட்டைப் போட்டது. கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னையில் தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடந்து வந்தன. 29 போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததாலும் சில கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட் டதால், எஞ்சிய போடிகள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்ட ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15 வரை நடைபெற உள் ளது. முதல் நாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
அங்கு செல்வதற்காக, சிஎஸ்கே கேப்டன் தோனி தனது குடும்பத்துடன் நேற்று சென்னை வந்தார். சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், வரும் 13 ஆம் தேதி சிஎஸ்கே வீரர்கள் தனி விமானத்தில் யுஏஇ செல்கின்றனர். அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நேரடியாக துபாய் வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.
தோனி தலைமையிலான எல்லோ ஆர்மி, 10 புள்ளிகளுடன் ஐபிஎல் அட்டவணையில் 2ம் இடத்திலும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, முதலிடத்திலும் இருக்கிறது.