நடிகை மீரா மிதுனுக்கு சம்மன்

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட மீராமிதுனை விசாரணைக்கு ஆஜராகும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அண்மையில் பட்டியலின மக்கள் தொடர்பாகவும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலின…

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட மீராமிதுனை விசாரணைக்கு ஆஜராகும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அண்மையில் பட்டியலின மக்கள் தொடர்பாகவும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலின மக்கள் தொடர்பாக ஆபாசமாகவும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.