தமிழ்நாடு வீரர்கள் இடம்பெறாத CSK அணியை தடை செய்ய வேண்டும் – சட்டமன்றத்தில் பாமக எம்எல்ஏ கோரிக்கை

தமிழ்நாடு வீரர்கள் இடம்பெறாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் பாமக எம்எல்ஏ வெங்கடேசுவரன் கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் இளைஞர் நலன் மற்றும் கைத்தறி – துணிநூல்…

தமிழ்நாடு வீரர்கள் இடம்பெறாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் பாமக எம்எல்ஏ வெங்கடேசுவரன் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இளைஞர் நலன் மற்றும் கைத்தறி – துணிநூல் துறைகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத் தொடரில் பேசிய தருமபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர்  வெங்கடேசுவரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் அதிக இளைஞர்களால் ஈர்க்கப்படும் போட்டியான ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாட்டைச் சார்ந்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி உள்ளது ஆனால் தமிழ்நாட்டில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை.

தமிழ்நாடு அணி என்பது போல விளம்பரம் செய்து நம் மக்களிடம் வர்த்தக லாபத்தை அந்த அணி அடைந்து வருகிறது. எனவே தமிழ்நாடு வீரர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விளையாட தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும்” என பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.