ருதுராஜ் கெய்க்வாட் அபாரம்; மும்பை அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்கு

மும்பை அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்தது கொரோனா பரவலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி இன்று தொடங்கியது. முதல் போட்டியே சென்னை மும்பை அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.…

மும்பை அணிக்கு 157 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்தது

கொரோனா பரவலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி இன்று தொடங்கியது. முதல் போட்டியே சென்னை மும்பை அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க வீரர்களாக டு பிளசிஸ், ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இதில், டு பிளசிஸ், மொயின் அலி,  சுரேஷ் ரெய்னா, தோனி அனைவரும் வந்த வேகத்திலேயே ஒற்றை இலக்க ரன்களுக்கு பெவிலியன் திரும்பி சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

இவர்களை அடுத்து வந்த ஜடேஜா, பிராவோவுடன் இணைந்து ருதுராஜ் கெய்க்வாட் அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினார். இதில், ஜடேஜா 26 ரன்களும்,  பிராவோ 23 ரன்களும் சேர்த்தனர். கெய்க்வாட் தனி ஒரு மனிதனாக மும்பை அணி வீரர்களின் பந்து வீச்சை மைதானத்தின் நாளா பக்கமும் சிதற விட்டு 58 பந்துகளுக்கு 88 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 156 ரம்ன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தனது ஆட்டத்தை நிறைவு செய்தது. மும்பை அணியில் போல்ட், ஆலன் மில்னே, பும்ரா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.