முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுகவை வீழ்த்த பலமான கூட்டணி தேவை – கரு.நாகராஜன்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக, அதிமுக – பாஜக இடையே 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக நடைபெற்ற முதல்கட்ட பேச்சு வார்த்தையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும், பாஜக தரப்பில் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதையடுத்து, நடைபெற்ற 2வது கட்ட பேச்சுவார்த்தையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவை வீழ்த்த பலமான கூட்டணி அமைய வேண்டும் எனவும், இதை கருத்தில்கொண்டு பாமக மீண்டும் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் 3வது அலையாக மாறியதா கொரோனா?

Halley karthi

வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்? வழிமுறைகள் என்ன?

Jeba Arul Robinson

80 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை 2 மணி நேரமாக போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்!

Jayapriya