முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் தமிழகம்

இந்தியாவில் ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2021-ம் ஆண்டில் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டைக் காட்டிலும் இது 15.3 சதவிகிதம் அதிகம் என்கிறது தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 2019ம் ஆண்டு 370 வழக்குகளும், 2020ம் ஆண்டில் 404 வழக்குகளும், 2021ம் ஆண்டு 442 வழக்குகளும் பதிவாகியுள்ளன. வரதட்சணை மரணம் தொடர்பாக 2019-ல் 28 வழக்குகளும், 2020ம் ஆண்டு 40 வழக்குகளும், 2021ம் ஆண்டு 27 வழக்குகளும் பதிவாகியுள்ளது.

மொத்தத்தில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2019ம் ஆண்டு 1,982 வழக்குகளும், 2020ம் ஆண்டு 2,025 வழக்குகளும், 2021ம் ஆண்டு 2,421 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக தமிழக காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலங்களின் பட்டியலில் தலைநகர் டெல்லி முதலிடம் வகிக்கிறது. 2019 – 2021ஆம் ஆண்டிற்கான தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின் படி, டெல்லி முதலிடத்தில் உள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஓராண்டில் மட்டும் 40 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.

2022ல் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாகத் தமிழ்நாடு விளங்குகிறது என்கிறது தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1091, 1098, 181 ஆகிய எண்களில் அழைத்தும், 9500099100 என்ற மொபைல் எண்ணில் மெசேஜ் செய்தும் புகாரளிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

– சுப்பிரமணியன், குற்றப்பிரிவு தலைமைச் செய்தியாளர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதல் சர்வதேச கோப்பையை வென்ற மெஸ்ஸி!

EZHILARASAN D

சாதனை படைத்த ‘பாராசைட்’ திரைப்படம் -ஹாலிவுட் தொடாத இமாலய உச்சத்தை தொட்டு அசத்தல்!!

Web Editor

இந்தியன் 2 படத்தில் புது முயற்சியை செய்து முடித்த கமல்ஹாசன்!

EZHILARASAN D