முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது-சுதாகர் ரெட்டி குற்றச்சாட்டு

“தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மது விற்பனை, கஞ்சா விற்பனை, குற்றச் செயல்கள்
அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் பொதுமக்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள்
கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதுதான் திராவிட மாடலா?” என தமிழக
பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூரில் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர்
சுதாகர் ரெட்டி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர்
செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிரதமர் நரேத்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு 15 நாட்கள் சேவை தினமாக பொதுமக்களுக்கு சேவை செய்து அவரது பிறந்த நாள் கொண்டாடுவுள்ளோம். செப்டம்பர் 2-ம் தேதி வரை 5000 பாரதிய ஜனதா கட்சியினர் பங்கேற்கும் இரத்த தான முகாம், மரக் கன்றுகள் நடும் விழா, குற்றச் சம்பவங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மத்திய அரசின் திட்டங்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி, பிரதமர் மோடி பற்றிய கண்காட்சி நிகழ்ச்சி, மருத்துவ முகாம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடத்த திட்டமிட்டு தற்போது தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 7 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசால் தமிழகத்திற்கு
கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டம், ரயில்வே பணிகள்,
பெட்ரோலிய திட்டங்கள் என பல திட்டங்களுக்காக மத்திய அரசு இந்த நிதிகளை வழங்கி
உள்ளது.

திமுக அரசு மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்திலும் வாக்கு வங்கி அரசியல் செய்து
வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கு பார்த்தாலும் தமிழகத்தில்
திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது என்று பேசி வருகிறார். திராவிட மாடல் ஆட்சி
என்றால் என்ன? தேர்தலுக்கு முன் பல வாக்குறுதிகளை அளித்த முதல்வர் ஸ்டாலின் குறிப்பாக 100 முதல் 200 வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அவற்றை
செய்வதற்கான முயற்சிகளில் கூட அவர் ஈடுபடவில்லை.

பெண்களுக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. பொங்கல் பரிசு திட்டத்தில் மிகப் பெரிய முறைகளோடு பல திட்டங்களில் முறைகேடு
ஊழல் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக தலைவர்கள் பலரும் முறைகேட்டில்
ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் சட்ட விரோத செயல்கள், மது
விற்பனை, கஞ்சா விற்பனை என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதான் திராவிட
மாடலா நான் கேட்கிறேன். பொது ஜனங்கள் பாதிக்கப்படுகிறார்கள். மத்திய தர மக்கள்
பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் திமுக ஆட்சியில் பாதிக்கப்படுகிறார்கள்.

அதே சமயத்தில் திமுக அமைச்சர்கள் அவர்களது வரம்புகளை மீறி எல்லை கடந்து
பேசுகிறார்கள். குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மக்களை பிளவுபடுத்தும்
விதமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார். அதே சமயத்தில்
நாகரீகமாகவும் திமுக தலைவர்கள் யாரும் பேசுவதில்லை.

ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதிநிதி, ஆனால் அவருக்கு தமிழகத்தில்
முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் கோவில்களை இடிப்பது கோவில்
இடங்களை ஆக்கிரமிப்பு செய்வது சரியில்லை .தமிழக அரசு நல்ல அரசு இல்லை .

மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. பாஜகவின்
கொள்கை நேசன் ஃபர்ஸ்ட் பார்ட்டி நெக்ஸ்ட். திமுகவின் கொள்கை அதற்கு நேர்மாறாய்
செல்பிஷ் ஃபர்ஸ்ட், பார்ட்டி நெக்ஸ்ட், பீப்பிள் லாஸ்ட் என்று செயல்பட்டு
வருகிறது.

குறிப்பாக திமுகவின் பொன்முடி, பி.டி.ஆர் உள்ளிட்டவர்கள் twitter பக்கத்தில்
வெளியிடும் கருத்துக்கள் வெறுக்கத்தக்கவை. தமிழகத்தில் தற்கொலை சாவுகள்
அதிகரித்து ,மது விற்பனை அதிகரித்து, சட்ட செயல்கள் அதிகரித்துள்ளது.

அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள
நிலையில் அவர் எப்படி அமைச்சர் பதிவில் உள்ளார்? என்று தெரியவில்லை மாநில
அளவில் ஊழல் அதிகரித்துள்ளது.

தமிழகம் சித்த பூமி, புண்ணிய பூமி, பல பாரத ரத்னாக்களை கொடுத்த பூமி தமிழகம்.
ஒரு புறம் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி நடைபயணத்தில் ஈடுபட்டு
வருகிறார். கட்சியிலிருந்து பல நிர்வாகிகள் வெளியேறும் நிலையில் பாரத்
ஜோடோ என்ற நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

பாரத் ஜோடோ அல்ல காங்கிரஸ் ஜோடோ தான் தற்போது நடைபெறுகிறது.

பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும், அனைத்து தரப்பு மக்களையும் சமமாய்
பார்க்கிறது. பல மாநிலங்களில் பாஜக ஆள்கிறது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற
தேர்தலில் “இல்லம் செல்வோம் ,உள்ளம் வெல்வோம்” என்று பாராளுமன்றத் தேர்தலை
சந்திக்க உள்ளோம். அதிக அளவில் வெற்றி பெறுவோம்.

தமிழக மக்கள் சிந்திக்கிறார்கள். திமுகவின் பொய் பிரச்சாரங்களை மக்கள்
நம்பவில்லை. அவர்களுக்கு உண்மை என்ன என்று தெரியும்.

திண்டுக்கல்லில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளன்று காங்கிரஸ்
கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தியது விளம்பரத்திற்காகவே.
காங்கிரஸ் கட்சி இந்த நாட்டினுடைய கருப்பாகும்.

காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை. அவர்களது குடும்பத்திற்கு தான்
முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று ஏற்கனவே குலாம் நபி ஆசாத்
தெரிவித்துள்ளார் என்று சுதாகர் ரெட்டி இவ்வாறு பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் 4 வழி சாலை; மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

G SaravanaKumar

பலாப்பழம், குளிர்பானம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு!

G SaravanaKumar

லயோலா கல்லூரி நிகழ்ச்சி; நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல் பேச்சு

G SaravanaKumar