கிரிக்கெட் வீரர் தோனி குறித்து டிவிட்டரில் பதிவிட்ட விராட்கோலி

தோனியும் தானும் இணைந்து விளையாடும் போட்டிகள் உற்சாகமானது என விராட்கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.   கிரிக்கெட் விளையாட்டில் தனக்கென தனி படையை உருவாக்கி வைத்துள்ள தோனி குறித்து அண்மை காலமாக…

தோனியும் தானும் இணைந்து விளையாடும் போட்டிகள் உற்சாகமானது என விராட்கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

 

கிரிக்கெட் விளையாட்டில் தனக்கென தனி படையை உருவாக்கி வைத்துள்ள தோனி குறித்து அண்மை காலமாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர். மேலும் கிரிக்கெட் வீரர்கள் எங்கு பேசினாலும் அங்கு பார்வையாளர்களோ, செய்தியாளர்களோ தோனி குறித்து கேள்வி எழுப்புகின்றனர். அவர்களும் அதற்கு கருத்து தெரிவித்து விடுகின்றனர்.

 

விளையாட்டை தாண்டி நல்ல நண்பனாகவும், குடும்ப உறுப்பினராகவும் தோனி இருந்து வருகிறார் என்று பலரும் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். அதேபேல், இந்திய அணி வீரர்கள் அவ்வப்போது, இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தோனி குறித்து பதிவிட்டு தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் விராட்கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், தோனியின் நம்பிக்கைக்குரிய பார்ட்னராக இருப்பது தனக்கு பெரும் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். நாங்கள் இருவரும் களத்தில் பார்ட்னராக இருந்து விளையாடியது மகிழ்ச்சி கரமானது என்றும் உற்சாகமான காலகட்டமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

எங்கள் கூட்டணி எப்போதுமே தனக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று பதிவிட்டு, தோனியின் டி-சர்ட் எண் 7 என்பதையும், தனது டி-சர்ட் எண் 18 என்பதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவிற்காக இருவரும் இணைந்து விளையாடிய புகைப்படத்தையும் விராட் கோலி பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார். இதனை பார்த்து பகிர்ந்து வரும் தோனியின் ரசிகர்கள், தோனியின் பாதையை யாராலும் மறக்க முடியாது என்று புகழ்ந்து வருகின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.