முக்கியச் செய்திகள் உலகம்

ஆகஸ்ட் 26: சர்வதேச நாய்கள் தினம்!

ஆகஸ்ட் 26 சர்வதேச நாய்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

கிராமங்கள் ஆனாலும் சரி, நகரங்கள் ஆனாலும் சரி மக்களின் செல்லப்பிராணி வளர்ப்பின் முதல் தேர்வாக பெரும்பாலும், நாய் இருக்கும். அதேசமயம், ஒரு சிலர் பூனையும் நாயும் சேர்த்து வளர்ப்பதுண்டு. நம் அன்றாட வாழ்க்கையில் நாய்களின் பங்கினையும் அவற்றின் அன்பு மற்றும் விஸ்வாசத்தை பாராட்டவும், உலகெங்கிலும் உள்ள வீடற்ற, ஆதரவற்ற நாய்கள் பற்றய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு சர்வதேச நாய்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாய் என்றால் நன்றியுள்ளது என்பது மட்டுமல்ல, பாதுகாப்பானது அன்பு கொண்டது. குடும்ப உறுப்பினர் போல உறவு கொண்டாடக் கூடியது. வீடுகளில் எத்தனையோ விலங்குகள், பறவைகளை வளர்த்தாலும் நாய் மட்டும் தான் நம்முடன் நெருங்கி பழகும். அதைதான் பெரும்பாலானோர் அனுமதிக்கின்றனர். தன்னை வளர்ப்பவர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி எப்போதும் விஸ்வாசமாக இருக்கும் நாய் ஐந்தறிவு ஜீவன் என்றாலும், சில நேரங்களில் இதன் செயல்பாடு ஆறறிவு கொண்டது போல இருக்கும்.

அண்மைச் செய்தி: ‘ஆண்களுடன் உடலுறவு; இத்தாலிய நபருக்கு குரங்கு அம்மை, கோவிட், எச்.ஐ.வி?’

உலகம் முழுவதும் நாய்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒருவகை. அவற்றின் தோற்றம், எடை, நிறம், உயரம் மற்றும் நடத்தை ஆகினவற்றை கொண்டு தனித்தனி நாய் இனங்களாக வகைப்படுத்தியுள்ளனர். எந்த இனத்தைச் சேர்ந்தவை எனச் சான்று வழங்கும் உலகளாவிய அமைப்பான “கென்னல் கிளப்” அமைப்பானது 350 நாய் இனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பதனை சர்வதேச நாய்கள் தினத்தில் தெரிந்துகொள்ளலாம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரிடமும் அன்பாக பழக கூடிய செல்லப் பிராணியான நாயை வளர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. எனவே, இந்நாளில் அருகிலிருக்கும் நாய்களை பாதுகாக்கவும், நேசிக்கவும் முயற்சிப்போம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

15ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்!

Halley Karthik

கல்யாண சீர்: மருமகனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய மாமனார்

Gayathri Venkatesan

சென்னையில் திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை

Halley Karthik