படைத்த வரலாற்றை நினைவு கூறும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்!

2011-ம் ஆண்டு இந்திய அணி படைத்த வரலாற்று சாதனையை நினைவு கூர்ந்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட்…

2011-ம் ஆண்டு இந்திய அணி படைத்த வரலாற்று சாதனையை நினைவு கூர்ந்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நாளாக இந்த நாள் பார்க்கப்படுகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கிரிக்கெட் உலகக் கோப்பை முதன் முதலாக 7 ஜூன் 1975 ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட ஆண்டு முதல் தற்போது வரை உலக ரசிகர்களால் தவிர்க்க முடியாத வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது.

இந்திய அணி முதன் முதலில் 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதனை அடுத்து நீண்ட ஆண்டுகளுக்கு பின் கடந்த 2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி உலக கோப்பையை வென்று இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்கள் வீரேந்திர சேவாக் மற்றும் யுவராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஷேவாக் தனது ட்விட்டரில் பக்கத்தில் 02-04 என்பது 10 ஆண்டுகளாக வாழ்நாளில் மறக்க முடியாத நாள்” என்று குறிப்பிட்டுள்ளார். யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பதிவில் ”இந்தியாவிற்கான வரலாறு படைக்கப்பட்ட தினம் இந்த நாள் 02-04-2011” என்று பதிவிட்டிருப்பதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களின் பதிவுகளை உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர் முக்கியமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.