கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கம்! #TamilnaduGovt அறிவிப்பு!

அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து, கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அயனாவரம் வருவாய் வட்டத்தில்…

அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து, கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து, கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

கொளத்தூர், பெரவள்ளூர், சிறுவள்ளூர் ஆகிய 3 வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாகக் கொண்டு கொளத்தூர் வருவாய் வட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3,78,168 பொதுமக்கள் வசிக்கும், 6.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கொளத்தூர் வட்டத்தில் பொதுப் பிரிவு, சமூக பாதுகாப்பு பிரிவு, நகர்ப்புற நிலவரித் திட்டம், வட்ட கலால் அலுவலகம், நில அளவை பிரிவு உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.