பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் எஸ்பிஐ வங்கியின் முதன்மை தேர்வை
தள்ளிவைக்கும் வரை சிபிஎம் போராடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் எஸ்பிஐ வங்கியின் கிளர்க் முதன்மை தேர்வு
தேதியை மாற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில்
100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய
ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி
வட்டார அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,
இந்தியாவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியாக செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆப்
இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தேர்வுகள்
நடத்தப்படுகிறது. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இதற்கான தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையன்று இதுபோல SBI யின்
முதன்மை தேர்வு தேதியை மாற்றக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறை
சார்ந்தவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என தெரிவித்தார்.
மேலும், 20 நாட்கள் கடந்துள்ளது விரைவாக முடிவெடுப்போம் என்று சொல்லுகிறார்களே தவிர முடிவெடுக்க தவிர்க்கிறார்கள். ஆனால் இப்போது வரை அதற்கு எந்த பதிலும்
இல்லை.தமிழ்நாட்டில் பணியாற்றக்கூடிய பதவிக்கான ஒரு தேர்வு 6 கோடி தமிழ்
மக்களுக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனை இது என கூறினார்.
அத்துடன், தமிழ்நாட்டின் குரலை வஞ்சிப்பது தமிழ்நாடு பெயர் குறிப்பிடுவதை தவிர்ப்பது,
தமிழ்நாட்டின் இலட்சினை மறுப்பது தேர்தல் நடக்கின்ற மையங்கள் முழுக்க எஸ் பி ஐ
வங்கியின் ஊழியர்கள் தேர்வு பணியாளர்களாக பயன்படுத்த வேண்டும் இப்படியாக
தேர்வார்கள் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல தமிழர்களின் உரிமை
சம்பந்தப்பட்ட பிரச்சனை. தமிழர்களின் அடையாளத்தை உரிமையை தொடர்ந்து மறுக்கிற பாஜக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வலிமையான கண்டனங்களை தெரிவிப்பதாக கூறினார்.
மேலும், கடந்த ரம்லான் பணிடிகை தேதியில் கூட நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழர்களின் உரிமையையும் பறிக்கின்றனர். இந்தியா என்பது அனைத்து தேசியத்திற்கும் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் கொடுக்கப்பட வேண்டும் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் உரிமை தமிழ்நாட்டில் நலனை மத்திய அரசு புறக்கணிப்பதாக தெரிவித்தார்.
அத்ர்துடன், இந்தியா முழுவதும் நடைபெறும் இந்த தேர்வை தமிழ்நாட்டில் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் விழாவில் வைக்கப்படுகிறது. வேறு ஒரு நாள் வைக்க வேண்டும். இதுவே விநாயகர் சதுர்த்தி அன்று இதுபோல தேர்வு வைப்பார்களா என கேள்வி எழுப்பிய அவர், இந்தியாவில் மற்ற மாநிலத்திற்கு வேறு தமிழ்நாட்டிற்கும் வேறாக என மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழர் விரோத போக்கு அரசாக ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதாக கூறினார்.
அத்துடன், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளன்று தேர்வு வைத்து திருநாளை கொண்டாட முடியாதது போல் மத்திய அரசு செயல்படுகின்றது. தேர்தல் தேதியை மாற்றும் வரை மார்க்சிஸ்ட் கட்சி போராடும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் திமுக
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டேட் வங்கியின் தலைமை செயலகத்திற்கு கடிதம்
எழுதியுள்ளனர். தமிழ்நாடு பெயர், தமிழ்நாடு இலச்சினை போன்று தொடர்ந்து
தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கின்றனர் என பேசினார்.