மின்சாரம் தாக்கி பலியான மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள்!

மயிலாடுதுறை அருகே, மேய்ச்சலுக்காக சென்ற ஐந்து மாடுகள் மின் கம்பி உரசி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவர் கஞ்சாநகரம் கிராமத்தில்,…

மயிலாடுதுறை அருகே, மேய்ச்சலுக்காக சென்ற ஐந்து மாடுகள்
மின் கம்பி உரசி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவர் கஞ்சாநகரம் கிராமத்தில், கொட்டகை அமைத்து மாடு மற்றும் ஆடுகளை பராமரித்து வருகிறார். இவரிடம் மூன்று எருமை மாடுகள் 8 பசு என மொத்தம் 11 மாடுகளும், 200 ஆடுகளும் உள்ளன. நேற்று மாலை நாலு மணி அளவில் கஞ்சாநகரம் கிராமத்தில், கலியமூர்த்தி என்பவரது வயலில் போர்வெலுக்கு செல்லும் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.

அப்போது அங்கு மேய்ச்சலுக்காக சென்ற மாடுகள் மின்கம்பி உரசி , ஒரு எருமை மாடு மற்றும் நான்கு பசு மாடு ஆகியன வயலிலேயே உயிரிழந்தன. தொடர்ந்து, செம்பனார்கோவில் போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் கால்நடை
துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மின்சாரம்
தாக்கி மாடுகள் உயிரிழந்த சம்பவம் , கிராம மக்களிடையே சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.

—-கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.