‘Covishield’ கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கோரி விண்ணப்பம்!

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘Covishield’-க்கு அவசர கால பயன்பாட்டு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடுயூட் ஆஃப் இந்தியா மருந்து உற்பத்தி நிறுவனத்தின் மூலம் ‘Covishield’எனும்…

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘Covishield’
-க்கு அவசர கால பயன்பாட்டு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடுயூட் ஆஃப் இந்தியா மருந்து உற்பத்தி நிறுவனத்தின் மூலம் ‘Covishield’
எனும் கொரோனா தடுப்பூசி முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுவருகிறது.

பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டு மையத்திடம் கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ளது சீரம் இன்ஸ்டிடுயூட் ஆஃப் இந்தியா.

இதனிடையே இந்த விண்ணப்பம் குறித்து வல்லுநர் குழு ஆலோசித்து முடிவெடுக்கும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம்மையத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறுகையில், ஜூலை 2021 வாக்கில் 300 முதல் 400 மில்லியன் டோஸ்களை மத்திய அரசு வாங்க இருப்பதாக கூறினார்.

அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ‘Covishield’ தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply