முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

கொரோனா தடுப்பூசிக்கு பயந்து ஆற்றில் குதித்த மக்கள்!


உத்தர பிரதேசத்தை சேர்ந்த கிராம மக்கள் தடுப்பூசி போடுவதில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த விநோத சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் பராபங்கி கிராமத்திற்கு அரசு அதிகாரிகள் தடுப்பூசி போடுவதற்காக சென்றுள்ளனர். ஆனால் விஷ ஊசி போட வருவதாக தகவல் பரவியதால் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஊசிக்கு பயந்து சரயு நதியில் விழுந்து தப்பித்துள்ளனர்.

இது குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில் “அது தடுப்பூசி அல்ல, விஷ ஊசி என்று எங்களுக்கு சிலர் தவறான தகவல் அளித்தனர். அதனால் தான் ஆற்றில் குதித்து தப்பிக்க நினைத்தோம்” என்று கூறினர்.
இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற ராம்நகர் உட்கோட்ட ஆட்சியர் ராஜீவ் குமார் சுக்லா கூறுகையில் “தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் நன்மைகளையும் கிராம மக்களுக்கு விளக்கிய பிறகும், 14 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்” என்று கூறினார்.

இந்தியாவில் போலியோ தடுப்பு மருந்து குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பத்தில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏனெனில், அரசு சதி செய்து குடும்பக் கட்டுப்பாடு செய்துவிடுவார்கள் என அவர்கள் பயந்தனர். எனவே ஊருக்குள் தடுப்பூசி போட வருபவர்களைக் கண்டு மக்கள் அச்சம் கொண்டு தெறித்து ஓடுவது அப்போது பிரதானமாக இருந்து வந்தது.

ஆனால், இன்றைய நவீன காலத்திலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வதந்திகளை நம்பி மக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதை புறக்கணிப்பதை எதிர்கொண்டு வருகின்றனர் அதிகாரிகள்.

Advertisement:
SHARE

Related posts

மகனுக்கு என்ன பெயர்? அறிவித்தார் நடிகை மேக்னா ராஜ்

Gayathri Venkatesan

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு!

Halley karthi

இந்தியாவிற்கு உதவி கரம் நீட்டிய சர்வதேச நாடுகள்!

Ezhilarasan