கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – இன்று ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு,…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு, மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்து.

ஆனால் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருவதால் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் மருத்துவத்துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.