மகாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. நாட்டில் கொரோனா 2 வது அலையின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.…

மகாராஷ்டிரா மாநிலத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா 2 வது அலையின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. மொத்தம் 816 பேர் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் மே 15 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்க மாநில அமைச்சரவை பரிந்துரை செய்தது. அந்த மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க சுகாதாரத்துறை பரிந்துரைத்தது. இதையடுத்து மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 முதல் 44 வயதுடையவர் களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. 45 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் ராஜேஷ் டோபே தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.