இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா 2ம் அலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நாட்டில் மருத்துவ அவசரநிலையை அறிவித்து, ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை அரசு கையகப்படுத்தி, கொரோனா தடுப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று, மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய மாநில அரசுகள் முறையாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர். நாட்டில் மருத்துவ அவசர நிலை அறிவிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு இல்லை என்றும் தெரிவித்தனர்.







