கோவையில் அரசு பணியாளரை காலில் விழ வைத்த சம்பவத்தில் கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒற்றர் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் உதவியாளராக முத்துச்சாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவர், தன்னுடையை சொத்து விவரங்கள் சரிபார்ப்புக்காக கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியை சந்தித்துள்ளார். அப்போது, ஆவணங்கள் முறையாக இல்லை என்றும், உரிய ஆவணங்களை எடுத்து வரவேண்டும் என்றும் கிராம நிர்வாக அலுவலர் கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த கோபிநாத், அவரை தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தவறாக பேச வேண்டாம் என முத்துச்சாமி கூறியபோது, முத்துச்சாமியின் சாதியை கூறி கோபிநாத் திட்டியதாக தெரிகிறது. மேலும், காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கோபிநாத் மிரட்டல் விடுத்ததாக கூறியதையடுத்து செய்வதறியால் தவித்த முத்துச்சாமி கோபிநாத் காலில் விழுந்து கதறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். இதேபோன்று அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் 2 மணி நேரமாக இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.