28.3 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

குற்றாலம் சாரல் திருவிழா; ஆகஸ்ட் 5ம் தேதி தொடக்கம்!

குற்றாலத்தில் குற்றாலம் சாரல் திருவிழா வரும் 5 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், குற்றால சாரல் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தினசரி கலை நிகழ்ச்சிகள், ஆணழகன் போட்டி, கொழு கொழு குழந்தைகள் போட்டி, படகுப்போட்டி, நீச்சல் போட்டி, கோலப்போட்டி, மலர் கண்காட்சி, வாசனைத் திரவிய கண்காட்சி, அறிவியல் சம்பந்தமான கண்காட்சி என மிகப் பிரமாண்டமாகச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நடத்தத் திட்டமிட்டு உள்ளதாகத் தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘செஸ் ஒலிம்பியாட்; ஆசை ஆசையாய் வந்த பாகிஸ்தான் வீரர்கள் நாடு திரும்பிய சோகம்!’

மேலும், புத்தகக் கண்காட்சி மிகப் பிரம்மாண்டமாகக் குற்றாலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சாரல் திருவிழா மற்றும் புத்தகத் திருவிழா திருவிழாவிற்கு நன்கொடை வழங்க உள்ள நபர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம் எனவும், மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram